Pages

Tuesday, September 11, 2018

காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்களுக்கு 'கல்வி பாரதி' விருது (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.11
மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா பட்டுக்கோட்டை தனியார் திருமண மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் (ஆசிரியர் தினம்) எஸ்.டி.எஸ் செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எச்.சேக்தாவூது, மாவட்ட துணை ஆளுநர் ஜெ. கார்த்திக்பாபு, மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் எஸ். சேதுக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பட்டிமன்ற பேச்சாளர் சேஷாத்ரி ராஜகோபால், திரைப்பட நடிகை கஸ்தூரி, ஓடந்துறை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு, ஆசிரியர்களுக்கு கல்வி பாரதி விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். இதில், பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்கம் பரிந்துரையின் பேரில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி.குமாரசாமி, பேராசிரியர் ஏ.அம்சத் ஆகியோருக்கு கல்வி பாரதி விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதே விழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் பரிந்துரையின் பேரில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஓ.எம் ஹாஜா முகைதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை கே. ஆஷா ஆகியோருக்கு கல்வி பாரதி விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...