Pages

Friday, September 21, 2018

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்கான கூண்டுகள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.21
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், தொடர் சேவைத் திட்டங்கள் கடந்த செப்.17 ந் தேதி தொடங்கி வரும் செப்.30 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கும் பொருட்டு, கூண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.21) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார். அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம், அதிரை லயன்ஸ் சங்க எம்.ஜே.எப் என்.யு ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர்.  நிகழ்ச்சியில், மரத்தில் தயாரிக்கப்பட்ட 25 கூண்டுகள் சிட்டுக்குருவிகள் வசிப்பிடங்களில் பொருத்தப்பட்டன.

முடிவில், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகச்சாமி, ஆர்.செல்வராஜ், குப்பாஷா எம். அகமது கபீர் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முத்துக்குமரன், பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...