Pages

Friday, September 14, 2018

பேராவூரணி நகர வர்த்தக கழக நிர்வாகிகள் பணியேற்பு விழா!

பேராவூரணி செப்.14-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தக கழக நிர்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை மாலை வர்த்தக கழக அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினரும், பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவருமான என்.அசோக்குமார் தலைமை வகித்தார். விழாவில் நகர வர்த்தக கழக தலைவராக ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளராக ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளராக எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் அசோக்குமார் மற்றும் பலர் வாழ்த்திப் பேசினர்.

கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கந்தப்பன், எம்.ஏ.லத்தீப், க.அன்பழகன், மு.சீனிவாசன், எஸ்.டி.டி.சிதம்பரம், கே.பி.நல்லசாமி, முன்னாள் நிர்வாகிகள் பி.எஸ்.அப்துல்லா, ஆர்.வெங்கடேசன், ஏ.சி.சி.ராஜா
மற்றும் அரசியல், வர்த்தக பிரமுகர்கள், பொது உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...