Pages

Thursday, September 6, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் ECO FEST- 2018 விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.06
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி பொருளாதாரத்துறை சார்பில், ECO FEST- 2018 விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடக்கவிழா உரை நிகழ்த்தினார். பொருளாதாரத்துறைத் தலைவர் பி.கணபதி வரவேற்றுப் பேசினார். பேராசிரியை என்.சித்ரா அறிமுகவுரை நிகழ்த்தினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக தேவக்கோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.சேவியர் விழா பேருரை நிகழ்த்தினார்.

விழாவையொட்டி, கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா முடிவில் பேராசிரியர் எஸ்.அபுதாஹிர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...