Pages

Saturday, September 29, 2018

IUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் தேர்வு ~ அதிரை பேரூர் நிர்வாகிகள் வாழ்த்து!

முகமது அபூபக்கர்
அதிராம்பட்டினம், செப். 29
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை கவிதா மன்றத்தில் இன்று (செப். 29) சனிக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பி.எஸ் ஹமீது தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில், தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் கே.கே ஹாஜா நஜ்முதீன், வழக்குரைஞர் ஏ.முனாப், ஏ. ஷேக் அப்துல்லா, அபூபக்கர், ஏ.சாகுல் ஹமீது, எம்.ஆர் ஜமால் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...