Pages

Wednesday, September 5, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் மேம்பாட்டுக்குழு கூட்டம்!

அதிராம்பட்டினம், செப்.05
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவ, மாணவிகள் மேம்பாட்டுக்குழு கூட்டம் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கல்லூரி முதல்வருமாகிய ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பயனுள்ள தகவல்கள் பற்றி விளக்கிப் பேசினார்.

கல்லூரி SC/ST மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.முகமது முகைதீன் கலந்துகொண்டு, இட ஒதுக்கீடு முறையைப்பற்றி விளக்கிப்பேசினார், மேலும், மாணவ, மாணவிகளின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதாகக் கூறினார்.

இக்கூட்டத்தில், கல்லூரி தர உறுதிப்பட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஜியாவுதீன், கல்லூரி உதவி பேராசிரியர்கள் கே.சுந்தர், பி.ராஜஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி பேராசிரியர் எம்.பழனிவேல், செய்தார். இதில் 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...