Pages

Saturday, September 29, 2018

TNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு !

அதிராம்பட்டினம், செப்.29
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் இ. முகமது. மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் மாநிலச் செயலாளர் முஜிப் ஆகியோர் கலந்துகொண்டு,
அண்மையில் மாநில முன்னாள் நிர்வாகி மீது நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்கள்.

மேலும், கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக நவப்ஷா, செயலாளராக ஹபீப் ரஹ்மான், பொருளாளராக நசுருதீன், துணைத் தலைவராக அப்துல் வஹாப், துணைச்செயலளாராக ஜிஷான் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...