Pages

Saturday, October 6, 2018

தஞ்சை மாவட்டத்தில் நாளை (அக்.07) வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் !

தஞ்சாவூர் மாவட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நாளை (07.10.2018) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 01.09.2018 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்  சேர்த்தல்ää நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் கடந்த 09.09.2018 மற்றும் 23.09.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 09.09.2018 மற்றும் 23.09.2018 தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக 26,742 விண்ணப்பங்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.  அதில், 18,550 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் தஞ்சாவ10ர் மாவட்டத்தில் உள்ள 2287 வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை (07.10.2018) நடைபெறுகிறது.  இம்முகாமில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான உரிய  விண்ணப்ப படிவங்களை ஆதார ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நேரில் அளிக்கலாம். மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.  பொது மக்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...