.

Pages

Tuesday, October 9, 2018

107 வயதில் ஸ்டைலாக முடி திருத்தும் உலகின் மிக வயதான கின்னஸ் சாதனை மனிதர்!

அதிரை நியூஸ்: அக்.09
2007 ஆம் ஆண்டே தனது 96 ஆவது வயதில் உலகின் மிக வயதான முடி திருத்துபவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகிவிட்ட அந்தோனி மான்சிநெல்லிக்கு தற்போது 107 வயதாகிறது என்றாலும் இன்று வரை மிகவும் உறுதியாக ஒரு இளைஞரைப் போல் சுறுசுறுப்புடன் நாள்தோறும் தளராது 8 மணிநேரம் உழைத்துக் கொண்டுள்ளார்.

காலத்திற்கேற்றவாறும், ஆட்களுக்கு ஏற்றவாறும் சிகையலங்காரம் செய்வதில் வல்லவர். தன்னுடைய 11வது வயதில் 25 சென்ட்டுகளுக்கு (காசுகளுக்கு) முடி வெட்டியவர் இன்று 19 டாலர்கள் வாங்குகிறார். தினமும் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை முடி திருத்தும் அந்தோனி மான்சிநெல்லி தனது தொழிலை ஆரம்பித்த போது வயது 11, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் பெயர் வாரன் ஹார்டிங்.

8 வயதில் குடும்பத்துடன் பெற்றோர்களுடன் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அந்தோனி மான்சிநெல்லி குடும்பச் சூழல் காரணமாக 11 வயதிலேயே இத்தொழிலுக்கு வந்தவர் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, மகன், பேரன் என பல தலைமுறைக்கும் சேவை செய்துள்ளார், இனி கொள்ளுப் பேரனுக்கும் செய்யக்கூடும். இவரிடம் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் வாடிக்கையாளராக முடிவெட்டிக் கொள்வோர் ஏராளம், இவர்களில் 56 வயது ஜான் ஓ ரூர்க்கி என்பவரும் ஒருவர்.

தினமும் 8 மணிநேரம் நின்ற நிலையிலேயே பணியாற்றும் மான்சிநெல்லிக்கு முட்டி வலியோ, முதுகு வலியோ எட்டிக்கூட பார்த்ததில்லையாம். 14 ஆண்டுகளுக்கு முன் மனைவியின் 70வது வயதில் அவரை இழந்துவிட்ட போதிலும் தினமும் பணிக்கு வருமுன் அவரது கல்லறை முன் அஞ்சலி செலுத்த ஒருநாளும் தவறியதில்லை.

அதுபோல் அவருக்கான அன்றாட உணவையும் தானே சமைத்து உண்கிறார் என்பதுடன் தனக்கான சிகை அலங்காரத்தைக் கூட தாமே செய்து கொள்வார் என புகழ்கிறார் மான்சிநெல்லியின் 86 வயது மகன் பாப் மான்சிநெல்லி. கூடுதலாக, சலூனுக்கு தானே காரை ஓட்டி வருவது, தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை பார்ப்பது, சலூனில் சிதறியிருக்கும் முடிகளை தானே கூட்டிப் பெருக்குவது என ஒரே பிஸி தான். இவருக்கு 6 கொள்ளுப் பேரர்கள் உள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.