Pages

Saturday, October 6, 2018

மழை, வெள்ள பாதிப்பு: ‘1077’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான புகார்களை ‘1077’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இடி மற்றும் மின்னல் ஏற்படும் நேரத்தில் வெளிப்புறங்களில் இருப்பதை தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் செல்ல வேண்டும். கட்டடங்கள் இல்லாத பகுதியாக இருப்பின்  பள்ளமான பகுதிகளில் குனிந்த நிலையில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.  இடி மின்னல்  ஏற்படும் போது மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மரத்தடியில் கட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். மின்னல் ஏற்படும் பொழுது வீட்டிற்கு வெளியே  உலோக பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பிகள் அறுந்த நிலையில் கிடந்தால், உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அறுந்து கிடைக்கும் மின் கம்பிகளின் அருகாமையில் செல்லக்கூடாது. வானிலை மற்றும் மழையளவு குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும். மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சேதங்கள் மற்றும் புகார்களை ‘1077’ என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். 

மேலும் வெள்ள பாதிப்புகள் குறித்து தஞ்சாவூர் வட்டத்தில் 04362-230456 என்ற எண்ணிலும், திருவையாறு வட்டத்தில் 04362-260248 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 04372-233225 என்ற எண்ணிலும், பூதலூர் வட்டத்தில் 04362-288107 என்ற எண்ணிலும், கும்பகோணம் வட்டத்தில் 0435-2430227 என்ற எண்ணிலும், பாபநாசம்  வட்டத்தில் 04374-222456 என்ற எண்ணிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 0435-2460187 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 04373-235049 என்ற எண்ணிலும், பேராவூரணி வட்டத்தில் 04373-232456 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...