Pages

Tuesday, October 16, 2018

தமிழ் உட்பட உலகிலேயே 140 மொழிகள் பேசும் காஸ்மோபாலிட்டன் மாநகரமாக துபை தேர்வு!

அதிரை நியூஸ்: அக்.16
தமிழ் உட்பட உலகிலேயே 140 மொழிகள் பேசுவோர் வாழும் காஸ்மோபாலிட்டன் மாநகரமாக துபை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு மக்கள் கலந்து வாழும் மிகப்பெரும் காஸ்மோபாலிட்டன் நகர் (Cosmopolitan City) எனும் சிறப்பை துபை பெற்றுள்ளது. இங்கு பேசப்படும் சுமார் 140 மொழிகளில் தமிழ் மொழியும் முக்கிய மொழிகளில் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது.

துபையின் மொத்த மக்கள் தொகை சுமார் 3.14 மில்லியனாகும் இதில் வெளிநாட்டில் பிறந்து துபையில் வாழ்வோர் மட்டும் ஏறக்குறைய 2.6 மில்லியன் மக்களாகும். இது துபையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 83 சதவிகிதமாகும். துபையில் ஷாப்பிங் பெஸ்டிவல் (DSF) நடக்கும் காலகட்டத்தில் துபையின் மக்கள் தொகை சுமார் 4.163 மில்லியன் என்கிற அளவுக்கு எகிறிக் குறைகிறதாம்.

துபைக்கு அடுத்து பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த 62 சதவிகித மக்கள் வாழ்கின்றனர். இங்கு பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 86 என Global consultancy McKinsey & Company என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபையில் பேசப்படும் பிரதான மொழிகளாக அரபி, ஆங்கிலம், ஹிந்தி, உருது, பார்ஸி, பெங்காலி, தமிழ், தகலோக், சைனீஸ், மலையாளம், பிரேஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் மற்றும் பல என அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலகளவில் பல்வேறு சர்வதேச நகரங்களில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டினரின் சதவிகித கணக்கு:
1. துபை - 83 சதவிகிதம்
2. பிரஸ்ஸல்ஸ் - 62 சதவிகிதம்
3. டொரன்டோ - 46 சதவிகிதம்
4. ஆக்லாந்து - 39 சதவிகிதம்
5. லாஸ் ஏஞ்சல்ஸ் - 39 சதவிகிதம்
6. சிட்னி - 39 சதவிகிதம்
7. சிங்கப்பூர் - 38 சதவிகிதம்
8. லண்டன் - 37 சதவிகிதம்
9. நியூ யார்க் - 37 சதவிகிதம்
10. மெல்போர்ன் - 35 சதவிகிதம்
11. ஆம்ஸ்டர்டாம் - 28 சதவிகிதம்
12. பிராங்;பர்ட் - 27 சதவிகிதம்
13. பாரீஸ் - 25 சதவிகிதம்

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...