Pages

Friday, October 12, 2018

துபையில் அக்.15 ந் தேதி இலவச சட்ட ஆலோசனை முகாம்!

அதிரை நியூஸ்: அக்.12
துபையில் எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 3 இடங்களில் இலவச சட்ட ஆலோசனை முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ள முன்பதிவு தேவையில்லை.

இந்த இலவச ஆலோசனை முகாம்களில் ரியல் எஸ்டேட், கட்டுமானம், வேலைவாய்ப்பு, நஷ்ட ஈடு, குற்றவியல், கடன் தொடர்புடைய பிரச்சினைகள், வாடகை பிரச்சினைகள், வாரிசு சட்டம், குடும்ப சிக்கல்கள் போன்ற பல விஷயங்களுக்கு ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வழக்கறிஞர்கள் மனுதாரர்களை சந்தித்து ஆலோசனைகளை வழங்குவர். மறவாமல் உங்கள் பிரச்சனைகள் தொடர்புடைய ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

முகாம் நடைபெறும் இடங்கள்:
1. DED head office in Deira ( Dept. Of Economic Development)
2. Al Twar Centre, Deira in Dubai Municipality Building.
3. Ta'sheel in Oud Metha.

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...