Pages

Friday, October 12, 2018

துபையில் 17வது ஆண்டாக குர்ஆன் மனனம் செய்த 115 சிறைவாசிகள் விடுதலை!

அதிரை நியூஸ்: அக். 12
துபை சிறைகளிலுள்ள தண்டனை சிறைவாசிகளில் கொலைக் குற்றவாளிகள் நீங்கலாக பிற குற்றவாளிகளுக்கு குர்ஆனை சிறையில் மனனம் செய்ய வாய்ப்பும் அதன் பின் அவர்கள் மனனம் செய்த அளவிற்கு ஏற்ப சிறை தண்டனையில் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சிலர் குறைந்தது 6 மாதம் முதல் 20 ஆண்டுகள்
வரை சிறை தண்டனையிலிருந்து தள்ளுபடி பெற்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

கடந்த 17 ஆண்டுகளாக 2017 ஆம் ஆண்டு வரை சுமார் 2,950 பேர் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளனர் அல்லது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என துபை சிறைத்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றது. இந்த சிறப்பு ஏற்பாட்டினை 2002 ஆம் ஆண்டிலிருந்து "துபை சர்வதேச புனித திருக்குர்ஆன் விருதிற்கான கமிட்டியும்" (The Dubai International Holy Quran Awards - Diqha) துபை சிறைத்துறையும் (The Punitive and Correctional Institutions of Dubai) இணைந்து வழங்கி வருகின்றன.

துபை சிறைகளில் குர்ஆன் மனன வகுப்புகளை நடத்துவற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் குர்ஆன் மனன வகுப்புக்களில் 124 மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களில் 115 பேர் தண்டனை சலுகைகளை பெற்றுள்ளனர்.

7 பேருக்கு 20 வருட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 பேருக்கு 15 வருட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
8 பேருக்கு 10 வருட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 பேருக்கு 5 வருட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
35 பேருக்கு 1 வருட சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
41 பேருக்கு 6 மாத சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறை தண்டனை சலுகைகளை பெற்று வெளியாகும் சிறைவாசிகளின் எஞ்சிய வாழ்க்கை குர்ஆனிய அடிப்படையில் நலவாழ்வாகவும் அமைதியானதாகவும் அமையும் என நம்புவதாக அல்குர்ஆன் விருது கமிட்டியும் துபை சிறைத்துறையும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...