Pages

Sunday, October 7, 2018

இந்த வருட உம்ரா சீஸனுக்காக இதுவரை 282,124 உம்ரா விசாக்கள் வழங்கல்!

அதிரை நியூஸ்: அக். 07
இந்த வருட உம்ரா சீஸனுக்காக இதுவரை 282,124 உம்ரா விசாக்கள் வழங்கல்.

புனித ஹஜ் நிறைவுபெற்றதை தொடர்ந்து இந்த வருடத்திற்கான உம்ரா யாத்திரை காலங்கள் துவங்கியுள்ளன. கடந்த வியாழன் (04.10.2018) வரை சுமார் 282,124 உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2030 ஆம் வருடத்திற்குள் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் உம்ரா யாத்தீகர்களை கையாள வேண்டும் என்ற நோக்கின் ஒரு பகுதியாக இவ்வருட முதல் உம்ரா பயணிகளின் வருகை, தங்குதல் மற்றும் வெளியேறுதல் போன்றவை வாராந்திர புள்ளி விபரங்கள் (Weekly Indicator) மூலம் அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கண்காணித்தல்களின் வழியாக விமான நிலையம், கப்பல் துறைமுகம் மற்றும் தரைவழி உள்நுழைவு மையங்கள் வழியாக எத்தனை பேர் உம்ராவிற்காக வருகின்றனர், எத்தனையெத்தனை பேர் மக்கா, மதினாவில் தங்கியுள்ளனர், எத்தனை பேர் தங்களின் உம்ரா வழிபாடுகளை முடித்து நாடு திரும்பியுள்ளனர் போன்ற விபரங்களை வாராந்தோறும் அறிய முடியும்.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி 96,038 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களில் 87,232 பேர் இன்னும் தங்கியுள்ளனர். இவர்களில் 65,967 பேர் மக்காவிலும், 21,265 பேர் மதினாவிலும், 8,806 பேர் உம்ரா பயணிகள் தங்களின் கடமையை முடித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்களில் 89,990 பேர் விமானம் மூலமும் 6,048 பேர் தரைவழி மார்க்கமாகவும் வந்துள்ளனர். துறைமுகம் வழியாக யாரும் இதுவரை வரவில்லை.

உம்ரா யாத்ரீகர்களில் இதுவரை பாகிஸ்தானிலிருந்து 46,202 பேரும், இந்தியாவிலிருந்து 25,580 பேரும், இந்தோனேஷியாவிலிருந்து 5,853 பேரும், ஸ்ரீலங்காவிலிருந்து 2,663 பேரும், ஜோர்டானிலிருந்து 2,585 பேரும் வருகை தந்துள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...