.

Pages

Wednesday, October 3, 2018

இந்தோனேஷிய சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீண்டார்!

அதிரை நியூஸ்: அக்.03
இந்தோனேஷிய சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீண்டார்

இந்த செய்திக்குள் போகுமுன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் வேண்டுகோளை இரக்கத்தோடு அணுகுவோம். பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷிய மக்களில் சுமார் 191,000 பேர் அவசர உதவிகளை எதிர்பார்த்தவண்ணமுள்ளனர். இவர்களில் சுமார் 46,000 குழந்தைகள், 14,000 முதியவர்கள் என்பது கருணையோடு கவனிக்கத்தக்கது. நமது உதவிகளும் பிரார்த்தனைகளும் அம்மக்களுக்காக இன்னும் அதிகமாகட்டும்...The United Nations Office for the Coordination of Humanitarian Affairs has warned that 191,000 people are in urgent need of help, among them 46,000 children and 14,000 elderly.

இந்தோனேஷியாவின் கடலுக்குள் நிகழ்ந்த சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து சுமார் 5 மீட்டர் உயரமெழுந்த சுனாமி பேரலைகள் பலூ (Palu) தீவை தாக்கியதில் நேற்று வரை (02.10.2018) 1,234 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது, பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன் ஏராளமானோரை காணவும் இல்லை.

சுனாமி பேரலைகள் தாக்கிய அன்று கடற்கரையோரம் சிறிய ஸ்டால் அருகே ஒரு பெண் குழந்தையின் தாயான 'டேவி' (Dewi) அவர்கள் வழமையான பணியில் ஈடுபட்டிருந்த போது சுனாமி பேரலைகள் தாக்கின. டேவி குப்பையோடு குப்பையாக அடித்துச் செல்லப்பட்டு மயங்கிய நிலையில் குப்பைகள் மத்தியில் கரையொதுங்கினார்.

அடுத்த நாள் குப்பைகள் கண்விழித்துப் பார்த்தால் ஆடைகள் கிழிந்த நிலையில் உடலெங்கும் காயம். பசி மயக்கம் தண்ணீர் தாகம் என வாடினாலும் தான் உயிர் பிழைத்திருப்பதையே நம்ப முடியாமல் சிரமப்பட்டு குப்பைகளிலிருந்து ஒருவாறாக கொண்டே வெளியேறினார்.

இன்னொருபுறம் அவரது கணவர் 'அஸ்வான்' (Azwan) சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தனது மனைவியை தற்காலிக தங்குமிடங்களில், மருத்துவமனைகளில், போலீஸ் நிலையங்களில், பிணவறைகளில் என தேடியலைந்தார். 2 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுதான் நமக்கு இறைவனால் விதிக்கப்பட்டது என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டவறாக தனது மகளோடு எஞ்சிய வாழ்வை கழிக்க எண்ணிக் கொண்டிருந்த அஸ்வானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி.

2 நாட்களுக்குப் பின் 'டேவி' நொண்டிக் கொண்டே வீடு திரும்பியதை கண்ட கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுனாமி பேரலைகளை மீறிய உயரத்திற்கு மகிழ்ச்சி அலைகள் எழுந்தன, ஆவலோடு அனைவரும் கட்டியணைத்து மகிழ்ந்தனர். எனினும், டேவி 'இது அல்லாஹ் உயிர்வாழ எனக்கு வழங்கிய 2வது வாய்ப்பு' என உளமாற நன்றி தெரிவிக்க மறக்கவில்லை. என்றாலும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தனது உடன்பிறந்தார்களை இன்னும் காணாமல் தொடர்ந்து தேடி வருகின்றார்.

Source: Strait Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.