Pages

Tuesday, October 9, 2018

பட்டுக்கோட்டையில் 3 நாள் விண்வெளிக் கண்காட்சி (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக்.09
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இஸ்ரோ- ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம் சார்பிலான 3 நாள் விண்வெளி கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். தஞ்சை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கண்காட்சியைத் தொடங்கிவைத்து பார்வையிட்டு பேசும்போது, அறிவியல் குறித்த மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள இக்கண்காட்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் இஸ்ரோ பொதுமேலாளர் வி.கும்பகர்ணன் பேசியது: இன்றைக்கு இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தட்ப வெப்ப நிலை குறித்த நிலவரங்களை தானே கண்டுபிடித்து இயற்கைப் பேரிடரில் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளை எளிதாக செய்து கொள்ள வழிவகுத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், இன்று நமது நாட்டின் எல்லைகள் முழுவதும் நம் செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவது நம்முடைய மிகப்பெரிய வெற்றியாகும். தவிர, கடந்த ஆண்டில் இந்திய மாணவர்கள் 4 பேர் தயாரித்த செயற்கைக் கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

சென்னை மருத்துவ கல்லூரி துறைத் தலைவர் வி. சுந்தர், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னதாக, ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மைய முதன்மைப் பொது மேலாளர் ஆர். செந்தில்குமார் வரவேற்றார். பாதுகாப்பு பிரிவு துணைத் தலைவர் தேவேந்திரகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். முதல் ஏவுதளத்தின் மேலாளர் ஆர்.முரளிதரன் நன்றி கூறினார்.

கண்காட்சியில், விண்வெளி ஆராய்ச்சி தொடர்புடைய 150-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு பயன்படுத்தப்படும் விகாஸ் என்ஜின், 6 ராக்கெட் மாதிரிகள், 3 செயற்கைக்கோள் என்ஜின் மாதிரிகள், கல்லூரியின் மின்னியல் 3-ம் ஆண்டு மாணவர்கள் யோகேஸ்வரன், வீரபாண்டியன் ஆகியோர் தயாரித்த மார்க் ரோவர் எனப்படும் ரோபோ ஆகியவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...