Pages

Tuesday, October 2, 2018

30% சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி இராசராசன் வணிக வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் 30 சதவிகித சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.10.2018) தொடங்கி வைத்தார்.

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராசராசன் வணிக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனையை தொடங்கி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கதர் ஆடை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தீபாவளி சிறப்பு விற்பனை குறியீடாக ரூ.93 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு தமிழர்கள் கதர் ஆடைகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு வசதியாக கதர் பருத்தியால் உற்பத்தி செய்யப்படும் அசல் வெள்ளி ஜரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் கதர் ரகங்கள், உல்லன் ரகங்கள், கதர் சட்டைகள், கதர் துண்டுகள், ஆகியவைகள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவில் 30 சதவிகித சிறப்பு தள்ளுபடியில் விற்பனைக்கு வரப்பெற்றுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கதர் அங்காடிகளிலும்  சுத்தமான இலவம் பஞ்சினால் தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள், மெத்தை விரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தவணை முறையில் கடன் வழங்கும் வசதி உள்ளதால், கதர் ரகங்களுக்கு 30 சதவிகித தள்ளபடி விற்பனையும் உல்லன் ஆடைகளுக்கு 20 சதவிகித தள்ளுபடி விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த பணியாளர்கள் கதர் ஆடையை பயன்படுத்தி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தேச.கலையரசன், கண்காணிப்பாளர் வே.பிரான்சிஸ் தெரசாமேரி, கதர் ஆய்வாளர் து.ராஜம், காதி கிராப்ட் மேலாளர் ஜி.சாவித்திரி மற்றும் சுகந்திர போராட்ட வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...