Pages

Tuesday, October 9, 2018

30,000 மணல் மூட்டைகளை அடுக்கி கல்யாண ஓடை வாய்க்கால் சீரமைப்பு பணி: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் ஊராட்சியில் கல்யாணஓடை வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பினை 30,000 மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (08.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேல உளுர் கிராமம், கல்யாண ஓடை வாய்க்காலின் இடதுபுற கரையில் 11.30 மீட்டர் தொலைவில் 10 மீட்டர் அளவுக்கு நேற்று உடைப்பு ஏற்பட்டது. தற்போது தற்காலிகமாக மரக்கட்டைகள் அமைக்கப்பட்டு 30,000 மணல் மூட்டைகள் கொண்டு உடைப்பினை அடைக்கப்பட்டுவரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இப்பணியில் சுமார் 200 பொதுப் பணித்துறை களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  மணல் மூட்டைகள் மூலம் உடைப்பினை சரி செய்யும் பணி இன்று இரவுக்குள் முடிக்கப்படும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வின் போது தலைமை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் முருகேசன் (கல்லணைக் கால்வாய்), இக்பால் (காவிரியாறு), மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகானந்தம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், துணை ஆட்சியர் கங்காதேவி, வட்டாட்சியர் ரமேஷ்  மற்றும் தீயணைப்பு மீட்பு துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறை ஆகிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...