.

Pages

Sunday, October 21, 2018

துபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒரு வாரத்திற்கு அடைப்பு!

அதிரை நியூஸ்: அக். 21
இன்று அக்.21 முதல் அக்.25 வரையான (Week without Service Centres) ஒரு வார கால வேலைநாட்களின் போது துபையின் 40 அரசுத் துறைகளின் சுமார் 1,100 நேரடி சேவைகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்படவுள்ளது. இது துபை மாநகரை 2021 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக ஆன்லைன் சேவைக்கு பழக்கப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும் என்பதுடன் பேப்பர் பயன்பாடு இல்லா அரசு நிர்வாகம் என்ற குறிக்கோளை நோக்கி நகரும் இன்னொரு படியாகும்.

இந்த 1,100 சேவைகளையும் வழங்கி வந்த கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (Customer Happiness Center) எனப்படும் 100 வாடிக்கையாளர் மையங்கள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக அடைக்கப்பட்டு இருக்கும் அதேவேளை இந்த சேவைகள் அனைத்தையும் மொபைல் போன் ஆப்கள், இணையதளங்கள், எலக்ட்ரானிக் தானியங்கி இயந்திரங்கள் (Electronic Kiosks) மற்றும் அழைப்பு மையங்களின் (Call Centers) வழியாக தொடர்ந்து பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் அலைச்சல், பண விரயம், காத்திருப்பு நேரம், வாகன இயக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு என அனைத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்தொரு முயற்சி கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘A Day without Service Centres’ என்ற பெயரில் ஒருநாள் முழுவதும் நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டு Week without Service Centres என ஓரு வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் ஆண்டுகளில் ஒரு மாத காலத்திற்கு இதுபோல் சேவை மையங்கள் அடைக்கப்பட்டு ஆன்லைன் சேவைக்கு பயிற்சி பெற வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் தற்போதே நிலவுகிறது.

துபை போக்குவரத்து துறை (RTA) தன்னுடைய 192 வகையான சேவைகளையும் இந்த ஒரு வாரம் முழுவதும் ஆன்லைன் வழியாக மட்டுமே வழங்குகின்றது. துபை போக்குவரத்து துறை சார்பாக இதுவரை 20 தானியங்கி சேவை கருவிகள் (Electronic Kiosks) அமைக்கப்பட்டுள்ளன. இது 2020 ஆம் ஆண்டிற்குள் 55 தானியங்கி சேவை கருவிகளாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபை போக்குவரத்து துறையின் அழைப்பு மைய சேவை எண்  [8009090] வாரம் முழுவதும் 24 மணிநேரமும் இயங்கும் (24/7) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார அடைப்பிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ள கீழ்க்காணும் சேவைகளை வழமைபோல் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம்:

Some of the services you can avail
DHA - www.dha.gov.ae
■ Sick leave attestation
■ Renew professional licence
■ Apply for medical fitness test

Dubai Municipality - www.dm.gov.ae
■ Request fines inquiry
■ Request for temporary winter camp
■ Request for animal treatment

Roads and Transport Authority - www.rta.ae
■ Recharge Salik account
■ Top up Nol public transport card
■ View and plan routes using metro, buses and marine transport

Dubai Police - www.dubaipolice.gov.ae
■ Traffic fines payment
■ Report traffic accident
■ Police clearance certificate

Dubai Economy - www.dubaided.gov.ae
■ Renew license
■ Pay inspection fines
■ Issue legal contract

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.