.

Pages

Tuesday, October 9, 2018

423 புதிய மஸ்ஜிதுகள் ~ 100 ஷரியா நீதிமன்றங்களுடன் மிளிரும் லண்டன் மாநகரம்!

அதிரை நியூஸ்: அக். 09
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் மாநகரம் இது முஸ்லீம்களின் லண்டன் என போற்றப்படும் வகையில் நாள்தோறும் புதிய பள்ளிவாசல்களாலும் அனுமதிபெற்ற ஷரியா நீதிமன்றங்களாலும் ஜொலித்து வருகின்றது. இந்நிலையே முழு பிரிட்டன் நாடு முழுவதும் பிரதிபலிக்கின்றது என்பதும் மிகையல்ல. இஸ்லாமிய அறிஞர் மவ்லானா சையத் ராஸா ரிஜ்வி அவர்களின் கூற்றின்படி, பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ளதைவிட லண்டன் மாநகர மக்கள் இஸ்லாத்தை வாழ்வியலாகவே ஏற்று தூய முஸ்லீம்களாக வாழ்ந்து வருகின்றனர் என உள்ளூர் பத்திரிக்கை ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டனில் தற்போது வரை 423 புதிய மஸ்ஜிதுகள் தோன்றியுள்ளன. இவற்றின் தொழுகை நேரங்களில் எப்போதும் தொழுகையாளிகளால் நிறைந்து காணப்படுகின்றன மாறாக சர்ச்சுகள் வெறுச்சோடி போயுள்ளதாகவும் ஒப்பீட்டாய்வு செய்து டெய்லி மெயில் என்ற பத்திரிக்கை தெரிவிக்கின்றது. மத்திய லண்டன் பகுதியான சான் ஜியார்ஜியோ (San Giorgio) என்ற பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் ஒரே நேரத்தில் சுமார் 1,230 பேர் கூட முடியும் என்றாலும் ஜெபக்கூட்டம் (Mass) எனும் வணக்கவழிபாடுகள் செய்யும் நேரத்தில் வெறும் 12 நபர்களே கலந்து கொண்டுள்ளனர். சன்டா மரியாவிலுள்ள (Church of Santa Maria) சர்ச்சிலோ 20 நபர்களே கூடியுள்ளனர். இந்த சர்ச்சுகளிலிருந்து சில மீட்டர் தூரமேயுள்ள புருனே ஸ்ட்ரீட் எஸ்டேட் மஸ்ஜிதில் தொழுகைக்கு போதிய இடமின்றி தவித்து வருகின்றனர். இதன் கொள்ளவு 100 பேர் மட்டுமே ஆனால் கூடுவதோ பல நூறு பேர்கள்.(The nearby Brune Street Estate mosque has a different problem: overcrowding. Its small room can contain only 100).

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் லண்டன் மஸ்ஜிதுகளுக்கு தொழுகைக்கு வருவோரின் எண்ணிக்கை சுமார் 683,000 ஆக உயரும், அதேவேளை சர்ச்சுகளுக்கு வாராந்திர ஜெபகூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை 679,000 ஆக குறையும் என்றும் ஓர் அய்வு தெரிவிக்கின்றது. 2001 ஆம் ஆண்டு முதல் சுமார் 500 சர்ச்சுகள் தனியார் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன ஆனால் 2012 முதல் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிய பள்ளிவாசல்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

பிரித்தானியர்களில் ஒரு பிரிவினரான ஆங்கிலிக்கன்ஸ் (Anglicans) என தங்களை அழைத்துக் கொள்வோரின் எண்ணிக்கை 21% லிருந்து 17% ஆக குறைந்துள்ளது அதாவது 1.7 மில்லியன் பேர் குறைந்துள்ளனர் அதேவேளை முஸ்லீம்களின் எண்ணிக்கையில் சுமார் 1 மில்லியன் பேர் அதிகரித்துள்ளனர் என NatCen Social Research Institute என்ற நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குச் செல்லும் முஸ்லீம்களை விட 3 மடங்கு குறைவான கிருஸ்தவர்களே ஜெபக்கூட்டங்களுக்கு செல்கின்றார்கள், இது ஒரு தலைமுறையின் மனமாற்றம் என கருதப்படுகின்றது.

லண்டனில் சுமார் 100க்கு மேற்பட்ட ஷரியா நீதிமன்றங்கள் அரசின் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன அதேவேளை நாட்டின் நீதிமன்றங்களும் ஒன்றையொன்று உரசாமல் சமரசமாக செயல்படுகின்றது. இந்த வாய்ப்பை வழங்கியுள்ள The British Arbitration Act and the system of Alternative Dispute Resolution என்ற பிரிட்டீஷ் சட்டம் மிகவும் போற்றுதலுக்குரியது. இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் இஸ்லாமிய சட்டங்களை பாடங்களாக (British universities are also advancing Islamic law) போதிக்கத் துவங்கியுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.