Pages

Monday, October 8, 2018

துபை விமான நிலைய மேம்பாடு பணிக்காக அடுத்த ஆண்டு 45 நாட்கள் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 28% சேவை குறைப்பு!

அதிரை நியூஸ்: அக்.08
துபை விமான நிலைய மேம்பாடு பணிக்காக அடுத்த ஆண்டு 45 நாட்களுக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் 28 சதவிகித சேவைகள் குறைக்கப்படுகின்றன.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் மே 30 வரை துபை சர்வதேச விமான நிலையத்தின் தென்புற ஓடுபாதையை மேம்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் சுமார் 28 சதவிகித சர்வதேச சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்படுகின்றன. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை விமான நிலையத்திலிருந்து வாரத்திற்கு சுமார் 3,600 சேவைகள் என வருடத்திற்கு சுமார் 191,000க்கு மேற்பட்ட சேவைகளை 2017 ஆண்டிலேயே நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரன்வே மேம்பாட்டு பணிகளின் போது எமிரேட்ஸ் நிறுவனத்தைப் போலவே பிளை துபை நிறுவனமும் தனது சேவைகளை குறைப்பதுடன் குறிப்பிட்ட சில சேவைகளை துபை அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கும் மாற்றவுள்ளது. இதைபோலவே பிற நாட்டு விமானங்களும் தங்களின் சேவையை குறைப்பதுடன் சில விமான சேவைகள் ஷார்ஜா விமான நிலையத்திற்கும் வேறு சில துபை அல் மக்தூம் விமான நிலையத்திற்கும் மாற்றிக் கொள்ள உள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...