Pages

Friday, October 26, 2018

அதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.26
அதிமுகவின் 47-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அக்கட்சியின் மாநில அமைப்புச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய ஆர். வைத்திலிங்கம் எம்.பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, அதிமுக மாநிலப் பேச்சாளர் கோவை. அழகு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில், அக்கட்சியின் பட்டுக்கோட்டை மாநகர செயலாளர் சுப.இராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ. மலைஅய்யன்,    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என் ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா.கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், மாவட்ட பாசறை செயலாளர் ஆர். அலெக்ஸ், அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் எம்.ஏ முகமது தமீம் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
  
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...