Pages

Thursday, October 11, 2018

சவுதியிலிருந்து இந்தியாவுக்கு கூடுதலாக 4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சப்ளை!

அதிரை நியூஸ்: அக். 11
சவுதியிலிருந்து இந்தியாவிற்கு நவம்பர் மாதத்தில் கூடுதலாக 4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சப்ளை

ஈரான் உலகின் 3வது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக உள்ள நிலையில் அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது எனவும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை மிரட்டியது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

ஈரானிலிருந்து கச்சா எண்ணையை அதிகளவில் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இந்தியா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா நவம்பர் மாதம் சுமார் 9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஈரானிலிருந்து இறக்குமதி செய்ய ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்தது அமெரிக்காவின் மிரட்டலையடுத்து ரத்து செய்யப்பட வேண்டிய நிலை நிலவுகிறது என்றாலும் ஆர்டர் கொடுத்தவரையாவது வாங்கிவிடுகின்றோம் என அமெரிக்காவிடம் கோரிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஈரானிய பெட்ரோல் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் வகையில் சவுதியிலிருந்து வழமையாக பெறப்படும் பெட்ரோல் இறக்குமதியை விட 4 மில்லியன் பேரல்கள் கூடுதலாக வேண்டும் என இந்தியாவின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிட். ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தலா 1 மில்லியன் கூடுதல் கச்சா எண்ணெய் பேரல்களுக்கு ஆர்டர் செய்துள்ளன. இதில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மட்டுமே இந்திய அரசு நிறுவனம் மற்ற 3 நிறுவனங்களும் தனியாருக்குச் சொந்தமானவை.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...