Pages

Sunday, October 14, 2018

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு 4-ம் கட்ட சிறப்பு முகாம் ~ ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்ற நான்காம் கட்ட சிறப்பு முகாமினை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .வள்ளலார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (14.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் இடையக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் விண்ணப்பப் படிவங்களின் இருப்பு, வாக்குச்சாவடி நிலையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பபடிவங்களின் விவரங்கள் ஆகியவை குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகரம், கண்டியன் தெருவில் உள்ள  நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும், பெருமாள் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து வாக்குச்சாவடி நிலையத்திற்கு வந்திருந்த பொது மக்களிடம் உரிய விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

பின்னர், பேராவூரணி வட்டம், கட்டயங்காடு உக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும் ஆய்வு செய்து பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்ப படிவங்களின் விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, பெருமகளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்து,  அப்பகுதியில் கிராம பணியாளர்களை கொண்டு  18 வயது நிரம்பியவர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வருவாய்த்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதன் பின், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு முகாமினை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) லலிதா, வட்டாட்சியர்கள் சாந்தகுமார் (பட்டுக்கோட்டை), பாஸ்கரன் (பேராவூரணி) ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...