Pages

Monday, October 15, 2018

அதிராம்பட்டினம் குடிநீர் தேவைக்காக இறைவை நீர் திட்டம், ஏரி வடிகால் தூர்வாருதல் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.15
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி ஆற்றுநீர் திறந்துவிடக் கோரியும், அதிராம்பட்டினம் பேரூராட்சி குடிநீர் தேவைக்காக, தொக்காலிக்காடு மகாராஜா சமூத்திர அணைக்கட்டு நீரோடையிலிருந்து வெளியேறும் உபரி நீரை பம்பிங் (இறைவை) மூலம் அதிராம்பட்டினம் பகுதி ஊரணிகளுக்கு நிரப்பிக்கொள்ளும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரியும், வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், ஏரிப்புறக்கரை கிராம ஈஸ்ட் கோஸ்ட் சாலை சின்ன ஏரி தொடங்கி, பிலால் நகர், ஏரிப்புறக்கரை கிராம சாலை வழியாக அதிராம்பட்டினம் கடற்கரை வரை உள்ள வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைக்கக்கோரியும், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே உள்ள கடற்கரைத்தெரு குடியிருப்புப் பகுதியில் புதிதாக காங்கிரட் மூடியுடன் கூடிய கழிவு நீர் ~ மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகள் பணிகள் உதவி இயக்குநர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை இன்று (அக்.15) திங்கட்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், சேக்கனா நிஜாம், ஏ.எஸ் அப்துல் ஜலீல், நூராணி, முகமது சிராஜுதீன், மு.காதர் முகைதீன், இஷ்ஹாக், அப்துல் ஜப்பார், கமால் உசேன், அப்துல் பத்தாஹ், எம்.கே.எஸ் அக்பர் (USA), அப்துல் காதர் ஆகியோரும், கடற்கரைத்தெரு ஜமாஅத் தலைவர் அப்துல் ரெஜாக் தலைமையில், ஜெஹபர் சாதிக், இர்பான் அலி, தாஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோரிக்கை மனுக்களில் கூறியிருப்பது:

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...