Pages

Thursday, October 18, 2018

ஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் பெட்ரோல் சேவை கட்டணம் அக்.21 முதல் அமல்!

அதிரை நியூஸ்: அக்.18
ஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளிலும் பிரிமியம் பெட்ரோல் சேவை கட்டணம் அக். 21 முதல் அமல்

வட அமீரகப் பகுதிகள் (Northern UAE) என்றழைக்கப்படும் ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய 5 எமிரேட்டுகளிலும் எதிர்வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் அட்னாக் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் (Adnoc petrol Bunk) 10 திர்ஹம் பிரிமியம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

10 திர்ஹம் பிரிமியம் சேவைக்கட்டணம் (Premium Service) வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வட அமீரகப் பகுதிகளில் கடந்த 7 மாதமாக பயிற்சி அடிப்படையில் சேவைக்கட்டணமின்றி பிரிமியம் முறை நடைமுறைப்;படுத்தப்பட்டு வந்தது. அபுதாபியை போலவே சுயமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை அதேவேளை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அட்னாக் நிலையங்களில் பெட்ரோல் நிரப்புபவர்கள் பிரிமியம் சேவைக் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு முறையும்  கூடுதலாக 10 திர்ஹம் செலுத்த வேண்டும்.

வீடு தேடி வரும் பெட்ரோல்:
தற்போது பீஜேபி ஆளும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வீடு தேடி வந்து மதுபானங்களை சப்ளை செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அமீரகத்திலோ அட்னாக் எனும் அரசு பெட்ரோல் நிறுவனம் நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பிய இடத்தில் பெட்ரோலை அதன் ஊழியர் வந்து நிரப்பித் தருவார்கள் என நியாபகமூட்டியுள்ளது.

'Call to Fuel' service எனும் ஆப் வழியாக உங்கள் வாகனங்களுக்குத் தேவையான  Special அல்லது  Super என்ற பெட்ரோல் வகையை தேர்வு செய்துவிட்டால் நடமாடும் அட்னாக் ஊழியர்கள் உங்களிடத்திற்கே வந்து நிரப்பித் தருவார்கள்.

அதேபோல் உங்களுக்கு வசதியான நாள் மற்றும் நேரத்தையும் கூட முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் வாகனங்களுக்கு அருகிலேயே காத்திருக்கலாம் அல்லது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து வைத்துவிட்டுக் கூட நீங்கள் சென்றுவிடலாம், ஊழியர்கள் எந்நிலையாயினும் உங்களுடைய வாகனத்திற்குரிய உரிய பெட்ரோலை நிரப்பித் தந்துவிட்டே செல்வர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...