Pages

Saturday, October 13, 2018

அதிராம்பட்டினத்தில் 5 மணி நேர திடீர் மின் தடையால் பொதுமக்கள் அவதி!

அதிராம்பட்டினம், அக்.13
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மதுக்கூர் வாடியக்காடு 33 கே.வி.ஏ துணை மின் நிலையத்தின் மின் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (அக்.12) வெள்ளிக்கிழமை இரவு மின் பாதையில் ஏற்பட்ட திடீர் பழுதால், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து மின் நுகர்வோர் சேவை மையம் அட்மின் கே.எம்.ஏ ஜமால் முகமது கூறியது;
'தஞ்சை மாவட்டத்தில், மின்சாரவாரியத்திற்கு அதிக வருவாய் தரக்கூடிய பகுதியாக அதிராம்பட்டினம் உள்ளது. அண்மை காலமாக, இப்பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்தடை ஏற்படுகிறது. தமிழக அரசு சார்பில், கடந்த 2014 ஆம் ஆண்டு 110 KV துணை மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும், இத்திட்டத்தை நிறைவேற்றாமல் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்படாமல் இருக்கவும், சீரான மின்சாரம் விநியோகிக்கவும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...