Pages

Friday, October 12, 2018

ஷார்ஜாவில் பேச்சுலர்கள் தங்கியிருந்த 50 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

அதிரை நியூஸ்: அக்.12
ஷார்ஜாவில் அல் நஸ்ரியா, மாய்சலூன், அல் நப்பாஹ், அல் நஹ்தா மற்றும் அல் மஜஸ் ஆகிய பகுதிகளில் ஷார்ஜா முனிசிபாலிட்டி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளுக்குப் பின் பேச்சுலர்கள் தங்கியிருந்த வீடுகளின் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் அவர்கள் அவ்விடங்களிலிருந்து வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது.

ஷார்ஜா முனிசிபல் சட்டப்படி, தொழிலாளர் விசாவில் உள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் வசிக்க அறவே அனுமதியில்லை, அவர்களுக்கு இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளில் தங்க வசதிகள் செய்து தருவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும்

எந்த விசா வகைகளின் கீழ்வரும் பேச்சுலர்களும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வில்லாக்களில் தங்க அனுமதியில்லை.

ரெஸிடென்ஸியல் பில்டிங்குகளில் தங்குவதற்கு கட்டிட உரிமையாளரின் அனுமதியை பெற்றபின் வாடகைக்கு எடுத்தவர் அங்கு தங்கப்போகும் அனைத்து பேச்சுலர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடி காப்பிகளையும் ஷார்ஜா முனிசிபாலிட்டியின் வாடகை ஒழுங்குமுறை கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

2 பெட்ரூம் அப்பார்ட்மெண்டில் அதிகபட்சமாக 6 பேச்சுலர்கள் மட்டுமே தங்கலாம், அதேபோல் ஒரேயொரு அறையுள்ள அப்பார்ட்மெண்டில் 3 பேர் மட்டுமே தங்கலாம். அறை சற்று பெரிதாக இருந்தால் மட்டுமே 4 பேர் வரை அதிகபட்சமாக தங்க அனுமதிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...