.

Pages

Tuesday, October 16, 2018

அமீரகத்தில் தனிநபர் இன்சூரன்ஸ் கட்டணம் ஆண்டுக்கு 60 திர்ஹம் மட்டுமே!

அதிரை நியூஸ்: அக்.16
அமீரகத்தில் தனிநபர் இன்சூரன்ஸ்  கட்டணம் ஆண்டுக்கு 60 திர்ஹம் மட்டுமே அமைச்சரவை முடிவு

அமீரகத்தில் அக்டோபர் 15 முதல் (நேற்று) முதல் அமீரகத்தில் வசிக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 60 திர்ஹம் மட்டுமே இன்சூரன்ஸ் கட்டணம் கட்டினால் போதுமானது என அமீரக அமைச்சரவையின் முடிவு அமுலுக்கு வந்தது. இந்த மலிவு விலை இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் 20,000 திர்ஹம் வரை மருத்துவ பலனை அனுபவித்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழேயே பணிமூப்பு பலன்கள் (End of service benefits), விடுமுறை கால சம்பளம் (Vacation salary), கூடுதல் பணிநேர சம்பளம் (Overtime salary), சம்பள நிலுவைகள் (Unpaid wages), சொந்த நாட்டிற்கு திரும்பச் செல்வதற்கான விமான டிக்கெட் (Return flight ticket) மற்றும் பணி காலத்தின் போது ஏற்படும் காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் (cases of work injury) என முக்கியமான அனைத்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுவரை ஒவ்வொரு விசாவிற்கும் நிறுவனத்தினர் தலா 3,000 திர்ஹத்தை வங்கிக் காப்புறுதித் (Bank Guarantee) தொகையாக வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாய சட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. 3,000 திர்ஹம் காப்புறுதியை செலுத்துவதா அல்லது அதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இன்சூரன்ஸ் திட்டத்தில் சேருவதா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரே முடிவு செய்து கொள்ளலாம். கட்டாய பேங்க் கியாரண்டி சட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதையடுத்து சுமார் 14 பில்லியன் திர்ஹம் நிறுவனங்களுக்கு திருப்பித் தரப்படும் பணிகளையும் அமைச்சகம் துவங்கியுள்ளது.

அதேபோல் வீட்டுப் பணியாளர்களை (Domestic workers) மாற்றி புதியவர்களை வேலைக்கு அமர்த்துவதால் ஏற்படும் செலவினங்கள், உடல் நல பிரச்சனைகள், சுயமாக முடிவின் அடிப்படையில் வேலையை விட்டுச் செல்லுதல் போன்ற பிரச்சனைகளின் போதும் அவர்களுடைய சம்பளம், நிலுவை சம்பளம், பணிமூப்பு பலன்கள், விடுமுறைகால சம்பளம் மற்றும் கூடுதல் பணிநேரத்திற்கான சம்பளத்திற்கான பொறுப்பை இப்புதிய இன்சூரன்ஸ் திட்டம் வழங்குகிறது.The insurance policy of domestic workers also covers the cost of replacing the worker in cases of his/her interruption of work, health issues or the desire (of the domestic worker) to cancel the working relationship.

இந்த புதிய இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்திட, வேலைவாய்ப்பு அனுமதிக்கான விண்ணப்பங்களை தஃஸீல் அல்லது தத்பீர் என்றழைக்கப்படும் டைப்பிங் மையங்களில் விண்ணப்பிக்கும் போது செலுத்தலாம் அல்லது தஃஸீல் இணையதளத்திற்குள் சென்று ஆன்லைன் வழியாக சுயமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். (Establishments registered with the ministry will have two options. The first is to buy insurance that can be issued immediately when typing the work permit application at Tasheel or other establishments that can complete their own applications using the Tasheel e-service.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.