அதிரை நியூஸ்: அக். 03
அபுதாபியின் புறநகர் பகுதியான பனியாஸ் கிழக்கில் அல் இமாம் அல் நவவீ மஸ்ஜித் எதிர்புறம் அமைந்துள்ள வீட்டில் நேற்று அதிகாலை சுபுஹூ தொழுகை நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 இமராத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்.
இத்தீவிபத்தில் 40 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவர் மற்றும் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட 6 சிறுவர், சிறுமியர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஜனாஸா நேற்று அஸருக்குப் பின் பனியாஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒருவர் மட்டும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. அன்னார்களுடைய ஜனாஸா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களின் மறுமை வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்.
இத்தீவிபத்தால் அண்டை அயலார்கள், குடும்பத்தினர் மற்றும் இச்சம்பவம் குறித்து கேள்விப்படும் நல்லுள்ளங்கள் எல்லாம் சோகத்துடன் ஆறுதல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடம் புஜைராவில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் மரணமடைந்ததே அமீரகத்தில் உச்சபட்ச தீ இழப்பாக பதிவாகியிருக்கும் நிலையில் தற்போது 8 பேர் தீயால் இறந்துள்ளதும் அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.