Pages

Tuesday, October 2, 2018

துபையில் காய்கனி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களை தானாக பின்தொடர்ந்து உதவும் டிராலிகள் விரைவில் அறிமுகம்!

அதிரை நியூஸ்: அக்.02
துபை அல் அவீர் காய்கனி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களை தானாகவே பின்தொடர்ந்து உதவும் டிராலிகள் விரைவில் அறிமுகம்

ஸ்மார்ட் டிராலி:
துபையிலுள்ள அல் அவீர் காய் கனிகள் மார்க்கெட்டில் தற்போது 3வது தொகுதி கட்டிடம் கட்டப்பட்டு வருவது விரைவில் நிறைபெறவுள்ளது. இந்த காய்கனி வர்த்தக மையத்தின் புதிய அறிமுகமாக வாடிக்கையாளர்களை தானாகவே பின்தொடரும் டிராலிகள் அறிமுகப்படவுள்ளன. இந்த வண்டிகளை தள்ள வேண்டியதில்லை என்பதுடன் கார் பார்க்கிங் வரை நம் பின்னாலேயே வாங்கிய காய்கறிகளையும் சுமந்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டேபிள்:
மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் பகுதியில் இந்த ஸ்மார்ட் டேபிள்கள் நிறுவப்படும். இந்த டேபிள்கள் வீணாகி வரும் காய்கனிகள் குறித்து சம்பந்தப்பட்ட பரிசோதனை அதிகாரிகளுக்கு தானாகவே தகவல்களை தெரிவிக்கும் இதன் மூலம் இந்த காய்கனிகள் எந்த துறைமுகம் வழியாக வந்தது என்ற தகவல்களை தரும் மேலும் சம்பந்தப்பட்ட காய்கனிகளை விற்பனையிலிருந்து அகற்ற உதவும்.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கனிகள் எங்கு விளைந்தன, அது காலாவதியாகும் தேதி, என்ன விலை என்பது போன்ற தேவையான தகவல்களை பார் கோடுகளை உபயோகித்து இந்த ஸ்மார்ட் டேபிள் வழியாக தெரிந்து கொள்ளவும்.

ஸ்மார்ட் ஹேண்ட்:
துபை அல் அவீர் மார்க்கெட்டில் காய்கனிகளை ஏற்றி இறக்க 3 நடைமேடைகள் உள்ளன. இதில் தொழிலாளர்களின் சிரமத்தையும் குறைக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் ஹேண்ட் டிவைஸ் பயன்படும் என துபை முனிசிபாலிட்டியின் பொது மேலாண்மை இயக்குனர் தாவூது அல் ஹாஜிரி அவர்கள் தெரிவித்தார். அப்போது ஜெர்மனியின் எஸ்ஸன் நகர மேயர் தாமஸ் குபேன் அவர்களும் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...