Pages

Sunday, October 14, 2018

துபையில் வேலை தேடுவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் ரெஸ்டாரண்ட்!

அதிரை நியூஸ்: அக்.14
துபை சிலிக்கான் ஓயஸீஸ் எனும் பகுதியில் இயங்கும் தி கபாப் ஷாப் எனும் உணவகம் வேலையின்றி வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக உணவை பரிமாறி வருகின்றது. இந்த உணவை சாப்பிடுவதற்காக நீங்கள் சங்கோஜப்பட வேண்டாம் உங்களால் முடியும் போது முடிந்ததை திருப்பித் தாருங்கள், முடியாவிட்டாலும் பரவாயில்லை எனக்கூறுகிறார் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடிய உரிமையாளர் கமால் ரிஜ்வி. அவர் உணவகம் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையும் அதையே தான் தெரிவிக்கின்றது.

காசு கொடுத்து உணவருந்துபவர்களுக்கும் இலவசமாக உணவு அருந்துபவர்களுக்கும் இடையில் எத்தகைய பாரபட்சமும் காட்டப்படாது மேலும் அங்குள்ள பணியாளர்களும் உங்களை கீழ்த்தரமாக நடத்தமாட்டார்கள் என உறுதி கூறுகின்றார் கமால் ரிஜ்வி. அதேபோல் நீங்கள் வேலையின்றி வேலை தேடி வருபவர் தான் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் கேட்பதுமில்லை. காசு கொடுக்க இயலாதவர்கள் குறிப்பிட்ட அந்த விளம்பரப் பலகையை அமைதியாக சுட்டிக்காட்டினாலேயே போதும் வேறு எதுவும் கேட்கவும் மாட்டார்கள் என்பதுடன் நீங்கள் உணவருந்தி சென்றதற்கான கணக்கும் பேணப்படாது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...