Pages

Sunday, October 7, 2018

அமீரகம் அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்!

அதிரை நியூஸ்: அக். 07
அமீரகம் அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் வெப்பமண்டல புயல் சின்னம் உருவானது

அமீரகம் அருகில் தென்கிழக்கு கடற்பகுதியில் வெப்பமண்டல புயல் (Tropical Storm) சின்னம் உருவாகியுள்ளது, இது அடுத்த 48 மணிநேரத்தில் இன்னும் வலுவடைந்து ஓமன் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடுமென அமீரக வானியல் மையம் தெரிவித்துள்ளதுடன் இதனால் அமீரகத்திற்கு எத்தகைய நேரடி பாதிப்புகளும் இருக்காது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 72 ஆண்டுகால ஓமனின் வானிலை வரலாற்றில் சுமார் 67 வெப்பமண்டலப் புயல்கள் ஓமனை தாக்காமல் திசைமாறி ஏமனையும் சொகற்றா தீவையும்  தாக்கியே சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்புயல் கரையை கடக்கும் போது மணிக்கு சுமார் 30 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்றும் இதனால் மேக மூட்டங்கள் உருவாவதுடன் மழையும் பொழியக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கில் நகர்ந்து ஓமன் கடற்பிரதேசம் வழியாக இப்புயல் கரையை கடக்குமானால் அமீரகத்திலும் அதன் தாக்கத்தின் காரணமாக ஓரளவு மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு அமீரக தட்பவெப்பம் அதிகபட்சம் 42 டிகிரி செல்ஷியஸாகவும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்ஷியஸாகவும் நிலவும். மலைப்பகுதிகளில் 21 டிகிரி செல்ஷியஸாகவும் நிலவக்கூடும். இரவு மற்றும் அதிகாலைப் பொழுதில் பனியுடன் கூடிய வெக்கை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.The relative humidity is expected to increase during night and early morning over coastal and internal areas, with a chance of fog or mist formation.

குறிப்பாக, இப்புயல் சம்பந்தமாக எத்தகைய வதந்திகளையும் நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் என்று அமீரக வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளதுடன், இப்புயல் குறித்த செய்திகளுக்கு அமீரக வானிலை மையத்தின் அதிகாரபூர்வ தளத்தையே பின்தொடரவும்.The NCM official urged the public to follow the official reports and avoid rumours.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...