தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களில் ஏராளமான இஸ்லாமியப் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான 5 வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு மதுரை விமான நிலையத்தில் புதிதாக தொழுகை அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது .
இந்த அறையில், சுமார் 10 க்கும் மேற்பட்ட தொழுகையாளிகள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்த இட வசதி அமைந்துள்ளது. ஒழு செய்வதற்கான இடம் அதன் அருகிலேயே அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் அவரவர் தொழுகையை அவரவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
Masha Allah welcome
ReplyDeletemasha allah
ReplyDeleteமாஷா அல்லாஹ் அருமை
ReplyDelete