Pages

Monday, October 15, 2018

பேரூராட்சியில் பல மடங்கு வரி உயர்வைக் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி அக்.15-
பேராவூரணி பேரூராட்சி பகுதியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, வீட்டு வரி உயர்வைக் கைவிட வேண்டும். 4 ஆவது வார்டுக்குட்பட்ட பாந்தக்குளம், அண்ணா நகர் பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் மின் வசதி, குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்
என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.சித்திரவேல் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் கே.சந்தானம், எஸ்.வி.ஸ்டாலின் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் டி.பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வி.இராஜமாணிக்கம், வி.கோபால், டி.ரவி, கே.எஸ்.முருகேசன், என்.நீலா, வை.நடராஜன், எம்.அம்சவல்லி, எம்.சண்முகம், எம்.சிவராமன், ஆர்.நடேசன், எஸ்.ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் "கடைமடை பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். ஆனந்தவள்ளி வாய்க்காலை மராமத்து செய்ய வேண்டும். பேராவூரணி நகரத்தில் தொடர்ந்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள், கடைகளை அடித்து உடைப்பது, ஆள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலை பாலத்தை இடித்து புதிதாக கட்ட வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் எப்போதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக பேராவூரணி பெரியார் சிலையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...