Pages

Thursday, October 18, 2018

அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: அக்.18
அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என அமீரக வானிலை மையம் அறிவிப்பு

அமீரகத்தின்  அல் அய்ன்  மற்றும் முக்ரைஸ் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ள நிலையில் இன்றும் அல் அய்ன், ஹத்தா, மஸாபி, புஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியின் ஸிலா (சவுதி எல்லை அருகே) ஆகிய பகுதிகள் உள்ளிட்ட அமீரகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அமீரக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஓரிரு தினங்களாக ஹத்தா அருகிலுள்ள அல் குர், ராஸ் அல் கைமாவிலுள்ள ஷவ்கா, ஷார்ஜாவின் 'வாதி அல் ஹீலோ', மஸாபி அருகிலுள்ள வாதி மரீத் மற்றும் வாதி மாய், அல் அய்னின் ஜபல் ஹபீத் மலை மற்றும் ஹாத்தம் அல் ஷக்லா ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...