Pages

Wednesday, October 17, 2018

மாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி தேர்வு!

அதிராம்பட்டினம், அக்.17
மாநில கால்பந்துப் போட்டிக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலோர் மற்றும் மேன் மேலோர் ஆகிய இரு பிரிவுகளில் விளையாட தகுதி பெற்றது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கால்பந்து போட்டி, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று (அக்.16) செவ்வாய்கிழமை மற்றும் இன்று (அக்.17) புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

இதில், 17 வயதுக்கு உட்பட்ட மேலோர் பிரிவில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய அணிகளை (1-0), (4-1) என்ற கோல் கணக்கிலும், 19 வயதுக்கு உட்பட்ட மேன்மேலோர் பிரிவில், திருவாரூர், தஞ்சை ஆகிய இரு அணிகளை (1-0), (1-0) என்ற கோல் கணக்கிலும் வென்று மாநிலப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

இதையடுத்து, சாதனை நிகழ்த்திய மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ.ராஜா, ஏ.ஜெயகாந்தன் ஆகியோரை, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...