அதிரை நியூஸ்: அக்.17
எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் குப்பை கழிவுகளிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்கத் திட்டம்
அமீரகம் ஓர் எண்ணெய் வளநாடு அதிலும் அபுதாபி எமிரேட்டில் தான் மிக அதிக எண்ணெய் வளம் உள்ளதுடன் இதுவே அபுதாபியின் பொருளாதார முதுகெலும்பாகவும் விளங்குகின்றது என்றபோதிலும் மாற்று எரிபொருள் திட்டங்களையும் முயற்சித்தே வருகின்றது.
அபுதாபியில் சேகரமாகும் சுமார் 700,000 டன் குப்பை கழிவுகளிலிருந்து விமானத்திற்கு தேவையான மாற்று எரிபொருளை (Renewable Jet Fuel) தயாரிக்க எதிஹாத் ஏர்வேஸ் நிறுவனம் முன்வந்துள்ளதுடன் அபுதாபியில் குப்பை கழிவுகளை கையாளும் தத்வீர் (Tadweer) நிறுவனத்துடனும் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. தத்வீர் குப்பை கழிவுகள் மேலாண்மை நிறுவனம் ஏற்கனவே 2040 ஆண்டிற்குள் அபுதாபியில் சேரும் குப்பைகளிலிருந்து 75 சதவிகிதத்தை மாற்று எரிபொருளாக மாற்றிட திட்டம் தீட்டி செயல்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் மூலம் சேகரமாகும் பெருமளவு குப்பைகள் மாற்று எரிபொருளாகவும், இன்ன பிற உப தயாரிப்புக்களாகவும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுப்புறச் சூழலும் மேம்படும். எதிஹாத் விமான நிறுவனத்தை பொருத்தவரை அதன் எரிபொருள் செலவு மிகச்சரிபாதியாக குறைவதுடன் விமானங்கள் வெளிப்படுத்தும் காற்றின் மாசும் 90 சதவிகிதம் வரை குறையும்.
தத்வீர் குப்பை மேலாண்மை நிறுவனம் சமையல் எண்ணெயை பயோ ப்யூயல் (Bio Fuel) எனப்படும் மாற்று எரிபொருளாக மாற்றும் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் செயல்படுத்தவுள்ளதும், பாலைவன மணற்பரப்பில் கடல்நீரைக் கொண்டு பயோ ப்யூயல் தயாரிக்கப்பயன்படும் விதைப்பயிர்களை வளர்க்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.