Pages

Friday, October 12, 2018

உலகின் மிக நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேர கடந்து சென்ற விமானம்!

அதிரை நியூஸ்: அக்.12
உலகின் மிக நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேர விமானம் சிங்கப்பூரிலிருந்து பறந்துசென்று நியூயார்க்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சிறப்பு பயணிகள் விமானம் ஒன்று 150 பயணிகள் மற்றும் 17 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூர் நேரம் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது சாதனைப் பயணத்தை துவக்கியது. இந்த விமானம் இடையில் எங்கும் இறங்காமல் 19 மணி நேரத்தில் 16,700 கி.மீ தூரம் பறந்து சென்று இறங்கும்.

இந்த விமானத்தில் 161 பயணிகள் அதாவது 67 பிஸ்னஸ் வகுப்பு பயணிகளும், 94 பிரீமியம் எகனாமி வகுப்பு பயணிகளும் செல்ல முடியும். இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 24,000 லிட்டர் அதாவது A350-900 ஏர்பஸ் வகை விமானங்களை விட 17% பெரியது.

இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் ஒவ்வொருவருக்கும் 8 மணிநேர படுக்கை ஓய்வு வழங்கப்படுகின்றது. பயணிகள் சோர்வடையாமல் இருக்க சிறப்பு உணவு, ஒரு வாரத்திற்கு தேவையான அளவிற்கு டிவி நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பறந்துள்ளது இத்தடத்திற்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் _A350-900ULR வகை விமானம். ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து நெவார்க் சென்ற A340 ஏர்பஸ் விமானம்    பெட்ரோல் செலவு கட்டுபடியாகதால் 2013 ஆண்டுடன் நிறுத்தப்பட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...