Pages

Thursday, October 4, 2018

குஜராத்தில் கல்லறைகளுக்கு நடுவே நடத்தப்படும் ஒர் உணவகம் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக்.04
குஜராத் மாநிலம் அஹ்மதாபாத் நகரின் லால் தர்வாஸா என்ற பகுதியில் ஓர் வித்தியாசமானதொரு உணவகம் அமைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது இந்த உணவக பகுதியின் உள்ளும் புறமும் கைவிடப்பட்ட சுமார் 32 கல்லறைகள் இருந்துள்ளன. இந்த கல்லறைகளை அப்புறப்படுத்தாமலேயே உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.
உணவகத்திற்கு மத்தியிலேயே ஆங்காங்கு மண்ணறைகள் உள்ளன. இந்த மண்ணறைகள் கிரில் கம்பி போடப்பட்டு சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த கல்லறைகளுக்கு அருகிலேயே உணவு மேசைகள் போடப்பட்டு உணவுகள் பரிமாறப்படுகின்றன. தினமும் கல்லறைகளை காலை சுத்தப்படுத்தி பூக்கள் தூவுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் இதன் உரிமையாளர் கிருஷ்ணன் குட்டி. இந்த வித்தியாசமான சூழலே அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாகவும், வாடிக்கையாளர்களும் எந்தவித சங்கோஜமுமின்றி மண்ணறை மாந்தர்கள் அருகிலேயே உணவருந்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு சூஃபி துறவி மற்றும் அவரது சீடர்களின் கல்லறையாக இருக்கலாம் என நம்பப்படும் இந்த கல்லறை உணவகத்தின் பெயரோ 'நியூ லக்கி ரெஸ்டாரன்ட்' இந்த கல்லறை உணவகத்தை காண்பதற்காவே அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் வருகிறார்களாம். மறைந்த ஓவியர் எம்.எப்.ஹூசைன் என்பவரும் இதன் வாடிக்கையாளர்களில் ஒருவராம்.

Sources: Khaleej Times / Dailymail etc.
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...