Pages

Thursday, October 11, 2018

துபை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இன்றி சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிப்பது எப்படி? (படங்களுடன் முழு விவரம்)

அதிரை நியூஸ்: அக்.11
துபை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இன்றி ஸ்மார்ட் டனல் வழியாக சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்கலாம்.

துபை சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3ல் ஆரம்பகட்ட சோதனை அடிப்படையில் முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு மட்டும் 'ஸ்மார்ட் டனல்' (Smart Tunnel) எனும் தானியங்கி இமிக்கிரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டனல் வழியாக வரும் உங்களுடைய முகத்தை ஆட்டோமெட்டிக்காக ஸ்கேன் செய்தே இமிக்கிரேசன் காரியங்களை முடித்துக் கொள்ளலாம், இதற்காக உங்களுடைய பாஸ்போர்ட், அடையாள அட்டை, போர்டிங் கார்டு போன்ற எதுவும் தேவையில்லை. இந்த 'ஸ்மார்ட் டனல்' இமிக்கிரேசன் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒரு சில நொடிகள் மட்டுமே.

ஸ்மார்ட் டனல் எவ்வாறு செயல்படுகிறது:
1. ஏற்கனவே ஸ்மார்ட் கேட் (Smart Gate) முறையை பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட் டனல் (Smart Tunnel) முறையை உபயோகிக்கலாம்.

2. ஸ்மார்ட் கேட் உபயோகிப்பாளர்களின் தனிநபர் விபரங்கள் ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவாகியிருப்பதால் ஸ்மார்ட் டனலுக்காக மீண்டும் பதிய வேண்டியதில்லை.

3. ஸ்மார்ட் கேட்டுக்காக முன்பதிவு செய்திடாதவர்கள் ஏர்போர்ட்டில் இதற்கென உள்ள 2 தானியங்கி இயந்திரங்களில் (2 Dedicated Kiosks) பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இமிக்கிரேசன் கவுண்டருக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவு (Registration counter besides the passport control section) செய்து கொள்ளலாம்.

4. முதன்முதலாக ஸ்மார்ட் டனலை பயன்படுத்தும் பயணிகள் ஒருமுறை இமிக்கிரேசன் கவுண்டரில் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொண்டு செல்ல வேண்டும் மறுமுறை என இனி எப்போதும் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொள்ள தேவையில்லை.

5. அதேபோல் பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதமாவது செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் உங்களுடைய பயணம் வேறு நாடுகளுக்கு தொடரும் நேரத்தில் திருப்பியனுப்பப்பட வாய்ப்புள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...