Pages

Wednesday, October 3, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் அமைக்கும் பணி நிறைவு !

அதிராம்பட்டினம், அக்.03
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் சிக்னல் கோபுரம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. மேலும், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது எனவும், எஞ்சிய அனைத்து பணிகளும் அடுத்து ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...