Pages

Thursday, October 11, 2018

துபை மரீனா கடலில் குப்பைகளை வேட்டையாடும் செயற்கை சுறா!

அதிரை நியூஸ்: அக்.11
கடலில் மனிதர்கள் எறியும் குப்பைகளால் மாசடைந்த வருகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவதென்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும். இந்நிலையில் துபையை சேர்ந்த ஒரு நிறுவனம் கடலில் மிதக்கும் குப்பைகள், பாசிகள், எண்ணெய் படலங்கள் போன்றவற்றை அகற்றும் Waste Shark எனும் மிதவை ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை மிதவை சுறாவை ரிமோட் கண்ட்ரோல் மூலமும் கைகளாலும் இயக்கலாம்.

ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரி சக்தியில் இயங்கும் இந்த செயற்கை சுறா மணிக்கு 10 முதல் 12 கி.மீ வேகத்திலேயே செல்லும். கடலில் மிதக்கும் குப்பைகளை விழுங்கும் இந்த சுறாக்கள் மூலம் 350 கிலோ குப்பை வரை சேகரிக்க முடியும்.அதேபோல் 180 லிட்டர் எண்ணெய் படலத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளும். இந்த குப்பை சுறாக்கள் அமைதியான, அலையற்ற கடற்பகுதிகள், ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் படகுகள் கப்பல்களை நிறுத்தி வைப்பதற்காக பயன்படும் மரீனா பகுதிகளிலேயே பயன்படுத்த முடியும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...