.

Pages

Tuesday, October 16, 2018

வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு பிரதமர் பல்வேறு சலுகைகள் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: அக்.16
வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களுக்கு அந்நாட்டு பிரதமர் பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் என்பவரின் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்ததை அறிவீர்கள். அவரது புராணத்தை பாடும் பதிவல்ல இது என்றாலும் அந்நாட்டின் வெளிநாடுவாழ் மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளதையும் அதேபோன்றதொரு வாய்ப்பு இந்தியர்களாகிய நமக்கு இல்லையே என்ற ஆதங்கமும் தான் இந்தப் பதிவின் பொதுவான நோக்கம்.

வெளிநாடுகளில் சம்பாதிப்பதற்காக சென்றுள்ள நாம் நம்முடைய வியர்வையின் பலனை அந்நிய செலாவணியாக அனுப்பி வருகின்றோம் ஆனால் நம்முடைய விமான நிலையங்களில் கஸ்டம்ஸ் மற்றும் இமிக்கிரேசன் அதிகாரிகளால் மிகவும் மட்டமாகவே கையாளப்படுகின்றோம் அதேவேளை வெள்ளைக்காரர்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு நம் கண்முன்னேயே ராஜமரியாதை கிடைப்பதையும் பார்க்கின்றோம்.

மரியாதை தருவது ஒருபுறம் இருக்கட்டும், அந்நிய செலாவணியை இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வாரி வழங்கும் நம்மால் டிவி போன்ற மின் சாதனங்களை, வீட்டுத்தேவைக்கான நகைகளை ஒழுங்காக கொண்டுவர முடிகிறதா? ஆயிரத்தெட்டு வரிகள், கையூட்டுக்கள். சரி அதெல்லாம் போகட்டும் என நினைத்தால் கூட நாம் முறையாக அனுப்பிய பணத்திற்கும் வரி, வட்டி, கிஸ்தி, அபராதம் என பல்வேறு கொள்ளையடிக்கும் பார்முலாக்கள்.

இதுவெல்லாம் சமீபத்தில் தீரும் என்பதற்கான அறிகுறியே தென்படாவிட்டாலும் நமது பக்கத்து நாட்டுப் பிரதமர் நம்மைப் போன்ற வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களின் குறைகளை காது கொடுத்து கேட்கவும், முடிந்தளவு தீர்க்கவும் முன்வந்துள்ளார்.

வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்கள் வங்கி மூலம் பணம் அனுப்பும் போது சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் விலக்கிக் கொள்ள முன்வந்துள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் 20 பில்லியன் டாலரிலிருந்து 40 பில்லியன் டாலர்களாக உயரக்கூடும் என நம்புகிறார். பிலிப்பைன்ஸ் நாடும் இவ்வாறான நடைமுறை உத்திகளை பின்பற்றி அந்நிய செலாவணி வருவாயை அதிகரித்துள்ளதை முன்னுதரணமாக குறிப்பிடுகின்றார்.

வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் மாஃபியக்களிடமிருந்து பாதுகாக்கப்படும் எனவும் உத்திரவாதம் தந்துள்ளார் இதன் மூலமும் உள்நாட்டில் பாகிஸ்தானியர்கள் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கக்கூடும்.

அதேபோல் விமான நிலையங்களில் இமிக்கிரேசன் அதிகாரிகளின் அடாவடியும் ஒழிக்கப்படும் என உத்தரவாதம் தருகின்றார். இதற்கான வழிகாட்டல்கள் பாகிஸ்தானின் வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன.

பீஜேபி ஆகட்டும், காங்கிரஸ் ஆகட்டும் அல்லது கூட்டணி ஆட்சியாகட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நீங்கள் சலுகைகள் தருவது பின்பு பார்த்துக் கொள்ளலாம் முதலில் கஸ்டம்ஸ் மூலம் தொந்தரவு தருவதையாவது நிறுத்துங்கள். தவறு செய்யக்கூடியவர்களை உங்களிடமுள்ள நவீன கருவிகளை கொண்டு கண்டறிந்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தவறு செய்யும் அதிகாரிகளிடமிருந்து வெளிநாடுவாழ் இந்தியர்களை காப்பாற்றுங்கள்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.