.

Pages

Monday, October 1, 2018

கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் இளைஞர்கள் நல ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.01
அண்மை காலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பயன்பாடு, இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக்கேடுகள் பற்றி கடந்த 23 ந் தேதி சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இளைஞர்களிடையே போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் சார்ந்த 2-வது ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மஹல்லா நிர்வாகிகள் தலைமை வகித்தனர். கூட்டத்தில், உலமா பெருமக்கள், அதிராம்பட்டினம் மஹல்லா நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

செய்தி துளிகள்:
1. கூட்டத்தில், மவ்லவி சபியுல்லா அன்வாரி, மவ்லவி ஹாரூன், மவ்லவி மீரான், மவ்லவி முகமது யூசுப், மவ்லவி முகமது இத்ரீஸ், மவ்லவி நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு உரை ஆற்றினர்.

2. இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி மாதந்தோறும் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அதிரையின் அனைத்துப் பகுதிகளில் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டன.

3. வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பின் தொடங்கிய கூட்டம் இரவு இஷா தொழுகை வரை நீடித்தது.

4. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

5. கூட்ட ஏற்பாட்டினை கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டோர் பதிந்த கருத்துகள் சில...
1. இறையச்சம் ஒன்று மட்டுமே இப்படிப்பட்ட தவறுகளை களைவதற்குரிய நிரந்தரத் தீர்வு. எனவே, இவை சார்ந்த ஆலோசனைகள் அதிகம் வழங்குவது.

2. கல்வி நிறுவனங்களில் மார்க்கம் சார்ந்த விழிப்புணர்வுக் கல்வியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுகோள் விடுப்பது.

3. அதிரையின் அனைத்து மஹல்லா சங்கங்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டியினர் பங்களிப்பில் பொது இடங்களில் இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது.

4. தடையற்ற பணப்புழக்கம், அதிகச் செல்லம் போன்ற பெயரில் அளவில்லா சுதந்திரம் கொடுப்பதின் விபரீதம் பற்றியும், பெண்கள் விழிப்புணர்வு குழுக்கள் மூலம் பெண்களின் பெற்றோருக்கு அறிவுரை செய்தல்

5. வீண் செலவுகளை தவிர்த்து மஹல்லாக்களின் பிரதானப் பகுதிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய "பதாகைகள்" (Flex board) வைப்பது..

6. தெருவாரியாக சமூக பொதுநல சிந்தனை கொண்ட தன்னார்வ பெரியோர் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பது

7. ஊரளவில் ஓர் குழு அமைப்பது, தெருவாரியாக கிளைக்குழுக்கள் ஏற்படுத்துவது

8. மாதம் ஒரு முறை கல்வி நிறுவனங்களில் உலமாக்கள் மற்றும் துறை சார்ந்த நெறியாளர்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்..

9. ஒழுக்கக்கேட்டின் பாதையில் செல்லும் இளைஞர்களை, சக நண்பர்கள் மூலம் சிறந்த ஆலோசனைகள் வழங்கி அவர்களை வழிகேட்டிலிருந்து தடுப்பது..

செய்தி தொகுப்பு: 
பேராசிரியர், மவ்லவி. முகமது இத்ரீஸ்
 

1 comment:

  1. அருமையான நிகழ்வு அல்ஹம்துலில்லாஹ், இன்னும் பலரையும் சென்றடையும் வகையில் விளம்பரங்களை கொண்டு சென்றிருக்கலாம். நம் இளைய தலைமுறை காக்கப்பட இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.