Pages

Thursday, October 11, 2018

ஏமன் மக்களை கொல்லும் ஏவுகணைகளை பாரம்பரிய கத்திகளாக மாற்றும் கொல்லர்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 11
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறதை அறிந்திருப்பீர்கள். நித்தமும் போர்ச்சூழலும் பஞ்சமும் நோய் நொடிகளும் மிகுந்த ஏமன் நாட்டில் உயிர் பிழைத்திருப்பது என்பதே பெரும் ஆச்சரியம் தான் ஆனால் அந்தப் போரே சிலருக்கு வாழ்வாதரங்களை தருகின்றன என்பதும் ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!

ஏமனில் போரில் ஏவுகணை வீச்சுக்கள் அன்றாடம் நடைபெறும் அதேபோல் பீரங்கிகளும் தெருவெங்கும் உருண்டுவரும். இந்த ஏவுகணைகள் இலக்கை அழித்துவிட்டு வெடித்து சிதறியபின் வெறும் இரும்புத் துண்டங்களாக சிதறிக் கிடக்கும், அதேபோல் எதிரிகளின் தாக்குதலில் சிக்கும் பீரங்கிகளும் வெறும் இரும்புக் கூடுகளாக கிடக்கும், கார் டிராக் போன்ற இதர வாகனங்களும் இவ்வாறே. இத்தகைய இரும்புகள் தான் ஏமனின் சில பாரம்பரிய இரும்பு கொல்லர்களின் (Blacksmiths) வாழ்வாதாரம்.

தெருவெங்கும் சிதறிக்கிடக்கும் ஏவுகணை மற்றும் பீரங்கியின் இரும்புகளை வாங்கி அவற்றை பாரம்பரிய குத்துவாள்களாக (ஜாம்பிய்யா / Jambiyya) மாற்றி வருகிறார்கள் சில கொல்லர்கள். குடும்ப கவுரங்களையும், தனி மனிதர்களின் சமூக மதிப்பையும் பறைசாற்றுவதற்காக இந்த குறுவாள்கள் ஏமன் மற்றும் ஓமனிய செல்வந்தர்கள் வாங்கி பட்டி அணிந்து இடுப்பில் சொருகிக் கொள்வார்கள். போர் நடைபெற்று வரும் நிலையிலும் இப்படி கத்தியை அணிந்து கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர் அதேபோல் வெளிநாட்டினரும் வாங்கிச் செல்வார்கள்.

குத்துவாள் செய்வதையே தங்களது பாரம்பரிய குடும்பத் தொழிலாக கொண்டவர்களில் ஒருவர் அலி கொமாரி. இவர் செய்யும் ஒரு குறுவாளின் விலை 100 டாலர் முதல் 150 டாலர் வரை விலை போகிறதாம், இதுவே பழைய குத்துவாள்களாக இருந்தால் அதன் விலை 1,000 டாலருக்கு மேல் செல்லுமாம் ஆனால் இவர்கள் வாங்கும் ஏவுகணை, பீரங்கி, வாகன இரும்புகளின் 1 கிலோ விலை 500 ஏமன் ரியால்கள் மட்டுமே அதாவது சுமார் 1 டாலர் மட்டுமே.

கோமாரியின் குடும்பத்தினர் பழைய ஆயுதங்கள் மூலம் குறுவாள்கள் செய்வது புதிதில்லையாம், 1962 முதல் 1970 வரை நடந்த ஏமன் உள்நாட்டுப் போரின் போது எகிப்தும் சவுதியும் எதிரெதிர் அணியினரை ஆதரித்தார்களாம் அப்போதும் அலி கொமாரியின் தந்தையார் இதுபோல் பழைய ஆயுதங்களை சேகரித்து குத்துவாள்கள் செய்து வந்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...