Pages

Thursday, October 11, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் ஒருநாள் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.11
காதிர் முகைதீன் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான ஒரு நாள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி தேசிய தரமதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஜியாவுதீன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு உதவி அலுவலர் ஜி.பரமேஸ்வரி கலந்துகொண்டு, அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் மாணவர்கள்  எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கிப்பேசினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் ஏ.கலைச்செல்வன், சி.அண்ணாதுரை ஆகியோர் மாணவர்கள் போட்டித்தேர்வினை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து ஒளிப்படக்காட்சி மூலம் விளக்கினார்கள். முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் செய்திருந்தார். முகாமில், சுமார் 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...