Pages

Monday, October 8, 2018

வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரை அதிராம்பட்டினம் கரிசல் மணி ஏரியில் நிரப்ப நடவடிக்கை!

அதிராம்பட்டினம், அக்.08
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள கரிசல் மணி ஏரிக்கு மழை நீரை நிரப்புவதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. முறையான தடுப்பு இல்லாததால், இப்பகுதியில் சேரும் உபரி நீர் வீணாகக் கடலில் கலக்கும் சூழல் உருவானதையடுத்து, வாய்க்காலில் மணல் மூடைகளால் தடுப்பு ஏற்படுத்தி, கரிசல் மணி ஏரிக்கு திருப்பி விடும் முன்னேற்பாடு பணியில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை மேற்பார்வையில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிரை பேரூர் முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை கூறியது;
'அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட சிஎம்பி லேன், புதுமனைத்தெரு, நடுத்தெரு, ஆலடித்தெரு, செட்டித்தெரு, கரையூர் தெரு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரப் பகுதியாகத் திகழ்கிறது கரிசல் மணி ஏரி. இந்த ஏரியை சுற்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான சுமார் 10 க்கும் மேற்பட்ட போர்வெல் உள்ளது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் நோக்கில், வாய்க்காலில் மணல் மூடைகளால் தடுப்பு ஏற்படுத்தி, கரிசல் மணி ஏரிக்கு திருப்பி விடும் முன்னேற்பாடு பணி இன்று மேற்கொள்ளப்பட்டன' என்றார்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...