Pages

Sunday, October 28, 2018

அயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றார்!

அதிரை நியூஸ்: அக்.28
அயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றார்

1990களில் மேற்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க பாடகியாக வலம் வந்த ஐரீஷ் பெண்ணான சினீத் ஓ' கார்னர் (Sinead O'Connor) புனித இஸ்லாத்தை ஏற்று தனது பெயரையும் ஷூஹாதா என மாற்றிக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ். தற்போது 51 வயதான இவர் மக்தா டேவிட் (Magda Davitt) என்ற இன்னொரு பெயராலும் அழைக்கப்பட்டு வந்தார்.

தான் பல்வேறு மதங்களையும் ஆராய்ந்த பின்பே சுயவிருப்பத்துடன் இஸ்லாத்திற்குள் நுழைவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன் 'ஹிஜாப் அணியுங்கள்'  "Wear a hijab. Just do it." என்ற வாசகத்தையும் இடம் பெறச் செய்துள்ளார். இதன் மூலம் தான் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுள்ளதை பகிரங்கமாக உலகிற்கு தெரியப்படுத்துவதற்காகத் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"This is to announce that I am proud to have become a Muslim. This is the natural conclusion of any intelligent theologian's journey," she tweeted.

ஹிஜாப் எனும் கண்ணியத்தை ஏற்றுள்ள இந்தப் பெண்மணியின் இளமை வாழ்க்கை அரைகுறை ஆடைகளாகவும், மழிக்கப்பட்ட தலையாகவும், கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனிமையான குரலையுடைய இப்பெண்மணி இஸ்லாத்தை தழுவிய பின் முதன்முதலாக தனது குரலில் பங்கோசையை எழுப்பி தனது டிவிட்டர் பக்கத்தில் இடம் பெறச்செய்துள்ளார்.

உலகெங்கும் இவ்வாறு ஆய்ந்து உணர்ந்து இஸ்லாத்தை பல்லாயிரக்கானோர் தழுவும் அதேவேளையில் பல நாடுகள் இஸ்லாமியர்களை பூண்டோடு அழிக்கும் பல்வேறு நாசகர திட்டங்களை வன்மமாக செயல்படுத்தி வருகின்றது. 

குறிப்பாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் செரிந்து வாழும் உய்குர் இன முஸ்லீம்களையும் அவர்களின் கலாச்சாரங்களையும் அழிக்கும் நோக்குடன் சிறார்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனி முகாம்களில் அடைத்து அவர்கள் இஸ்லாத்தின் வாடையே தெரியாமல் வளரச் செய்தும், பெரியவர்களை பிடித்து வேறு தனித்தனி முகாம்களில் அடைத்து கம்யூனிச பாடங்களை கட்டாயப்படுத்தி கற்கச் செய்வதுடன், இளைஞர் இளைஞிகளுக்கு தனியே அடைத்து தேசபக்கி என்ற பெயரில் மூளைச் சலவை செய்து இஸ்லாத்தை விட்டு வெளியேறச் செய்யும் நடவடிக்கைகளிலும் சீன கம்யூனிச அரசு மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. 

https://www.youtube.com/watch?v=qmvyjwLxC5I

https://twitter.com/BBCNewsAsia/status/1054963550349914112

https://www.bbc.com/news/world-asia-china-45474279

https://www.bbc.com/news/world-asia-45812419

http://www.theweek.co.uk/97335/china-s-secret-muslim-internment-camps-revealed

https://www.businessinsider.com/life-inside-china-internment-camps-for-uighur-minority-in-xinjiang-bbc-report-2018-8

https://www.vox.com/2018/10/24/18018282/china-reeducation-camps-uighur-muslims

https://www.youtube.com/watch?v=5bwkiZlsAcY

சகோதரர்களே!
இந்த உய்குர் இன முஸ்லீம்கள் மீண்டும் குடும்பமாக இணைந்து வாழவும், இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக பின்பற்றவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தூயவன் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். 

சீன கம்யூனிச அரசும் தன் தவறை உணர்ந்து திருந்தவும், இதர சீனர்களுக்கும் இஸ்லாம் சென்று சேரவும் துஆ செய்யுங்கள். உங்களுடைய துஆக்களே அவர்களுக்கு உதவும் ஒரே நம்பிக்கை.

Source: Khaleej Times / BBC / vox / businessinsider / theweek etc...
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ்... அனைவரும் துஆ செய்வோமாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...