Pages

Friday, October 5, 2018

அதிரையில் சாலையில் தேங்கும் கழிவு நீர்: கால்வாய் அமைத்திட கோரிக்கை!

அதிராம்பட்டினம், அக்.05
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு 11-ஆவது வார்டு பகுதி சாலையில் சாக்கடை நீர், குளம் போல தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு தென்புறம் 11-ஆவது வார்டு குடியிருப்பு நிறைந்தப் பகுதியில் சாக்கடை நீர், குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.

அதிராம்பட்டினம் பேரூர் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது, முறையான வடிகால் வசதி இல்லாத நிலையில், பொது நடைபாதையிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் குளம் போல தேங்கி நிற்பதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. மேலும், கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையால் குடியிருப்புவாசிகள், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத அளவு மழை நீர் தேங்கி விடுவதால், மாணவர்களும், பெண்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பேரூராட்சி அலுவலர்கள் இப்பகுதியை ஆய்வு செய்து, விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்மென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அகமது அனஸ் கூறியது;
'அதிராம்பட்டினம் பேரூர் 4 தெருக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புதுத்தெரு குடியிருப்பு வழியாக செல்கின்றன. பல ஆண்டுகளாக இங்குள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளதால், குடியிருப்பு சாலையில் கழிவு நீர் தேங்கி விடுகின்றன. இதுபற்றி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைகாலமாக இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, முறையான வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...